ETV Bharat / state

11 மாதக் குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற தாய் உயிரிழப்பு! - Woman commits suicide

திருப்பத்தூர் மாவட்டத்தில் 11 மாதக் குழந்தையுடன் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண் ஒருவர் உயிரிழந்தார். குழந்தையை அக்கம்பக்கத்தினர் மீட்டனர்.

கவிதா
கவிதா
author img

By

Published : Jul 9, 2020, 1:19 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் கந்தலியை அடுத்த கோயிலூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிலம்பரசன் (32) கவிதா (27) தம்பதியினர்.

இவர்களுக்கு 11 மாதமே ஆன ரிஷித் என்ற ஆண் குழந்தை ஒன்று உள்ளது. சிலம்பரசன் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூலை7) இரவு கவிதா சிலம்பரசனை வேலைக்கு செல்லுமாறு அனுப்பி வைத்துவிட்டு, தனக்கு தூக்கு மாட்டியதுமல்லாமல், தனது குழந்தைக்கும் தூக்கு மாட்டியுள்ளார்.

அப்போது கவிதாவின் அலறல் சத்தத்தை கேட்டு வீட்டிலிருந்த அவரது மாமியார், நீலா ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போது கவிதா தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அக்கம்பக்கத்தினருக்கு தகவல் அளித்துள்ளார்.

அதன் பின்னர் அக்கம்பக்கத்தினர் உடனடியாக வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது கழுத்தில் கயிற்றுடன் கட்டப்பட்டிருந்த குழந்தையை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இத்தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கந்தலி காவல்துறையினர் கவிதாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வு சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 11 மாத குழந்தையை தாய் தூக்கிலிட முயன்று தானும் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: குடிப்பதற்கு மனைவி பணம் தராததால் கணவன் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.