ETV Bharat / state

பால் உற்பத்தியார்கள் 100க்கும் மேற்பட்டோர் முற்றுகைப் போராட்டம் - ஜோலார்பேட்டை அருகே பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

திருப்பத்தூர் : ஜோலார்பேட்டை அருகே 100க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள், முறைகேட்டில் ஈடுபட்ட கூட்டுறவு சங்க செயலரின் செயல் மற்றும் அலுவலக உதவியாளர் பணி நீக்கத்தைக் கண்டித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருப்பத்துார்
திருப்பத்துார்
author img

By

Published : Nov 11, 2020, 1:11 PM IST

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உள்பட்ட காவேரிபட்டு பகுதியில், 1,180 பால் உற்பத்தியாளர்கள் சேர்ந்த கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது.

இந்தச் சங்கத்தின் மூலம் சுமார் 500க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பாலை அருகிலேயே உள்ள தொகுப்பு பால் குளிர்விப்பு மையத்தில் கொடுத்து பயன்பெற்று வருகின்றனர்.

இச்சூழ்நிலையில் காவேரிபட்டு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் செயலர் மோகன், சங்கத்தில் உள்ள போர்டு உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் கோபுவை கைவசப்படுத்திக் கொண்டு தன்னிச்சையாக செயல்படுவதாகவும், இதனால் பால் உற்பத்தியாளர்கள் ஆகிய தங்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படாமல் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும் உற்பத்தியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும், 20 ஆண்டு காலமாக பணியாற்றிய விஜயகுமார் என்பவரை காழ்ப்புணர்ச்சியின் காரணமாக வேலையை விட்டு அகற்றியதைக் கண்டித்தும், மீண்டும் விஜயகுமாரை பணியில் சேர்க்க வேண்டும் எனக் கோரியும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து காவேரிபட்டு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.