திருப்பத்தூர் அதிமுக நகர செயலாளர் T.T. குமார் என்பவர் தனது சொந்தப் பணத்தில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு 20 நவீன படுக்கைகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில், வணிகவரி, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவனருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், தலைமை மருத்துவர் திலிப்பன், மருத்துவர்கள் பிரபாகரன், சிவகுமார், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கேஜி ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தனிநபர் பாதுகாப்பை உறுதிசெய்யும் தகுந்த இடைவெளி உள்ளிட்ட விதிகள் கடைப்பிடிக்கப்படவில்லை என்ற குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: 17 நாள்கள் போராட்டம்... கரோனா நோயாளியை மீட்டெடுத்த அரசு மருத்துவமனை!