திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை கிழக்கு - மேற்கு என இரு பகுதியையும் இணைக்கும் வகையில், ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்று ஜோலார்பேட்டை பகுதி பொதுமக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை வைத்த நிலையில், மேம்பாலம் கட்டும் பணிக்கு மத்திய அரசுக்கு, மாநில அரசு சுமார் 20 கோடி ரூபாய் நிதி வழங்குவதாக ஒப்புதல் அளித்தது.
அதனைத்தொடர்ந்து மூன்று தவணைகளாக நிதி கொடுக்க ஒப்புக்கொண்டு மேம்பாலப் பணியை தொடங்கிய நிலையில், தற்போது முடியும் தருவாயில் சுமார் 4 கோடியே 70 லட்சம் மதிப்பிலான காசோலையை ஜோலார்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சருமான கே.சி.வீரமணி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருளிடம் வழங்கினார்.
இந்த நிதியின் மூலம் ரயில்வே மேம்பாலப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: சேலத்தில் புதிய இரண்டடுக்கு மேம்பாலம் விரைவில் திறக்கப்படும்!