ETV Bharat / state

100 ரூபாய்க்கு 18 வகையான காய்கறிகள் விற்பனை!

திருப்பத்தூர்: அனைத்து பகுதிகளிலும் நூறு ரூபாய்க்கு 18 வகையான காய்கறிகள் விற்பனைசெய்யப்படுவதாக மாநில வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்தார்.

அத்தியாவசியப் பொருள்களை வழங்கிய அமைச்சர் கே.சி. வீரமணி

author img

By

Published : Apr 18, 2020, 3:49 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை நகராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேருராட்சி, அரசு மருத்துவமனைகள், அம்மா உணவகங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி இன்று அரிசி, கோதுமை, எண்ணெய், சோப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.சி. வீரமணி கூறியதாவது, “திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இதன் காரணமாக மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள், காய்கறிகள் வாகனங்கள் மூலம் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

அத்தியாவசியப் பொருள்களை வழங்கிய அமைச்சர் கே.சி. வீரமணி
மேலும் நூறு ரூபாய்க்கு 18 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு இன்றுமுதல் மாவட்டத்தில் நகர்ப்புறங்களில் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும். இதனை வரும் நாள்களில் கிராமங்களிலும் எடுத்துச் சென்று விற்பனைசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நகர்ப்புற, கிராமப்புற பகுதிகளுக்குத் தொண்டு நிறுவன செயற்பாட்டாளர்கள் அனைத்து வகையான காய்கறிகளை பொதுமக்களின் வீட்டிற்கே சென்று கொடுத்துவருகின்றனர். கரோனா தொற்று பரவாமல் இருக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இதனை எதிர்க்கட்சிகள் நன்கு தெரிந்துகொண்டும் அரசியல் காரணங்களுக்காக மாற்றிப் பேசி குழப்பத்தை உருவாக்கிவருகின்றனர். காய்கறிகள் பூக்கள் உள்ளிட்ட வேளாண்மைப் பொருள்கள் தேங்கி சேதமாகாத வகையில் அதனை விற்பனைசெய்ய தமிழ்நாடு முதலமைச்சர் விரைவில் நல்ல தகவலை வெளியிடுவார்” என்றார்.
செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.சி. வீரமணி

இதையும் படிங்க: காய்கறிகள் அதிக விலைக்கு விற்பனை - மாவட்ட அலுவலர்கள் நேரில் ஆய்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.