ETV Bharat / state

'மக்கள் திமுகவை நிராகரித்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது' - Minister Nilofar Kapil's speech at Vaniyambadi

திருப்பத்தூர்: தமிழ்நாட்டு மக்கள் திமுகவை நிராகரித்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது எனத் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்துள்ளார்.

வாணியம்பாடியில் அமைச்சர் நிலோபர் கபில் பேச்சு

author img

By

Published : Feb 17, 2021, 9:29 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி திருமாஞ்சோலைப் பகுதியில் நகர கழகச் செயலாளர் சதாசிவம் தலைமையில் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவுசெய்த தொழிலாளர்களுக்கு நலவாரிய அட்டை, இலவச வேட்டி-சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபில் கலந்துகொண்டு தலைமை வகித்தார். அப்போது பேசிய அவர், "யார் வேண்டுமானாலும் கட்சித் தொடங்கலாம்; அது அவர்களது உரிமை. தற்போது நடிகர்கள் அரசியல் கட்சித் தொடங்குவது பேஷனாகிவிட்டது.

ரஜினி கட்சி ஆரம்பித்து அனைவருக்கும் கும்பிடு போட்டுவிட்டு நாமம் போட்டுவிட்டு காணாமல்போய்விட்டார். அடுத்ததாக கமல்ஹாசன் ஒரு கட்சியை நடத்திக் கொண்டு எம்ஜிஆர் ஆட்சியை உருவாக்குகிறேன் என்று சொல்கிறார்.

எம்ஜிஆர் ஆட்சி கொண்டுவருவேன் என்று சொல்வதற்கு எவருக்கும் உரிமையில்லை. அதிமுகவிற்கு மட்டும்தான் எம்ஜிஆரின் பெயரைச் சொல்ல உரிமை உள்ளது.

தமிழ்நாடு மக்கள் திமுகவை நிராகரித்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. 2021இல் கூட அதிமுக ஆட்சிதான் வரவுள்ளது. சிறந்த ஆட்சி நடைபெறுவதை எதற்காக நிராகரிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

வாணியம்பாடியில் அமைச்சர் நிலோபர் கபில் பேச்சு

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் குட்லக் ரமேஷ், ஆலங்காயம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: பிணையில் வந்து குற்றம் செய்தவர்களுக்கு பிணை ரத்து: காவல் ஆணையர்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.