கரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு தொடர்ந்து வரும் நிலையில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டையில் உள்ள அம்மா உணவகங்களில் முதலமைச்சர் எடப்பாடி. கே.பழனிச்சாமியின் அறிவுறுத்தலின்படி இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி. வீரமணி, அம்மா உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டு தரமான உணவு பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறதா என உணவை உட்கொண்டு உணவின் தரத்தை அறிந்து கொண்டார்.
ஆய்வுக்கு பின் அவர் கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி. பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் மிக சிறப்பாக மேற்கொண்டு வருகிறார். திருப்பத்தூர் மாவட்டத்தில் 17 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதில் இன்று 5 நபர்கள் முழுமையாக குணமடைந்து அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மீதமுள்ள 12 நபர்கள் இரண்டாம் கட்ட பரிசோதனை முடிந்து வீடுகளுக்கு அனுப்படுகின்றனர். இனி ஒரு நபருக்கு கூட கரோனா தொற்று ஏற்படாமல் இருக்க மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஊரக துறையினர், மருத்துவர்கள் என முழுமையாக தங்களது பணிகளை அர்பணிப்போடு செய்து வருகின்றனர். முதலமைச்சரின் ஆலோசனைகளை முழுமையாக கடைபிடித்து மாவட்டத்தில் கரோனோவை அண்ட விட மாட்டோம்' என்றார்.
இதையும் படிங்க... சேலம் அம்மா உணவகங்களில் காலை, மதியம் உணவு இலவசம் - முதலமைச்சர் பழனிசாமி