ETV Bharat / state

புயல் கரையைக் கடக்கும் நேரம் அதிகரிக்க வாய்ப்பு? - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்! - CYCLONE FENGAL UPDATE

சென்னை மற்றும் புதுச்சேரியை நெருங்கிய ஃபெஞ்சல் புயல் நகரும் வேகம் குறைந்து வருவதால், புயல் கரையைக் கடக்கும் நேரம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடல் சீற்றம்
கடல் சீற்றம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2024, 9:28 AM IST

சென்னை: ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் வேகத்தை 12 கி.மீ வேகத்தில் இருந்து 7 கி.மீ வேகமாக குறைத்துக் கொண்டள்ளதாகவும், புயல் கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி, தற்போது, சென்னையிலிருந்து தென்கிழக்கு திசையில் 190 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து கிழக்கு திசையில் 180 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து வடகிழக்கு திசையில் 210 கிலோ மீட்டர் தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. இன்று மதியம் காரைக்கால் - மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு மிக அருகில் கரையை கடக்கிறது.

அப்போது மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீச கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக அதிகளவு மேக கூட்டங்கள் கடற்கரையை நோக்கி இழுக்கப்படுவதால், தற்போதே காற்றுடன் கூடிய அதிக மழை பெய்ய தொடங்கியுள்ளது.

புயல் கரையை கடக்கும் நேரத்தில் காற்று 90 கிலோ மீட்டர் வேகம் வரை வீசும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போதே காற்றின் வேகம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக எண்ணூர் துறைமுகத்தில் 7 செ.மீ மழையும், காஞ்சிபுரம், மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், புழல் பகுதிகளில் தலா 3 செ.மீ மழையும், மகாபலிபுரம், தரமணியில் தலா 2.5 செ.மீ மற்றும் செங்கல்பட்டு பகுதியில் 2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: கரையை நெருங்கும் ஃபெஞ்சல் புயல்; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

புயல் காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, புயல் நகரும் வேகம் குறைந்து வருவதால், கரையை கடக்கும் நேரம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.