ETV Bharat / state

சென்னை கனமழை; ரயில் சேவையில் தடையில்லை - சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!

சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம்போல இயங்கும் எனவும் பயணிகள் தடையின்றி பயணிக்கலாம் எனவும் சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் சேவை (கோப்புப்படம்)
சென்னை மெட்ரோ ரயில் சேவை (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2024, 9:54 AM IST

Updated : Nov 30, 2024, 1:10 PM IST

சென்னை: ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் அதி தீவிர கனமழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் பெய்து வரும் மழை தீவிரமாகியுள்ளதால் பணிக்கு செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பலரும் தங்களது சொந்த வாகனங்களை தவிர்த்துவிட்டு, பொது போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மழை காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் எந்த தடையுமில்லை என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரயில்கள் இயங்கும்

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது; மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம்போல தாமதமின்றி தொடங்கப்பட்டுள்ளன. பயணிகள் இந்த சேவையைப் பயன்படுத்தி தங்கள் பயணங்களைத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் படிக்கட்டுகளைப் பயன்படுத்தும் போது பயணிகள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: புயல் கரையைக் கடக்கும் நேரம் அதிகரிக்க வாய்ப்பு? - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

பயணிகள் தங்கள் வாகனங்களை இன்று (30-11-2024 )முதல் கோயம்பேடு மெட்ரோ, செயின்ட் தாமஸ் மவுண்ட் மற்றும் அரும்பாக்கம் மெட்ரோ நிலைய வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். பயணிகள் உதவிக்கு - 1860 425 1515, மகளிர் உதவி எண் - 1553705 ஆகியவற்றை தொடர்புகொள்ளலாம்.

பொதுமக்கள் தங்கள் பயணத்திற்கு மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இன்று காலை 07:00 மணிக்கு மேலும் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் அதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிடும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : Nov 30, 2024, 1:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.