சென்னை: ஃபெஞ்சல் புயல் நெருங்கி வரும் நிலையில் சென்னை விமான நிலையத்தில் விமானங்களின் இயக்கம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அந்நிறுவனத்தின் சென்னையிலிருந்து இயங்கும் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானங்கள் ரத்து செய்யப்படுவதற்கும் வாய்ப்புள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
பயணிகள் தங்கள் விமானங்களின் நிலை குறித்து இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காலை 9.30 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்படுவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
#6ETravelAdvisory: Due to adverse weather conditions in #Chennai, flight operations are temporarily on hold, with possible cancellations. We kindly request you to check your flight status at https://t.co/CjwsVzFov0.
— IndiGo (@IndiGo6E) November 30, 2024
இது தொடர்பாக ஈடிவி பாரத்திடம் பேசிய சென்னை விமான நிலைய அதிகாரிகள், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் விமான ஊழியர்களின் பாதுகாப்ப நலன் கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், வானிலை சீரடைந்த பின்னர் மீண்டும் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் தொடங்கும் எனவும் கூறினர்.
ஆனால் இதே நேரத்தில் ஏர் இந்தியா ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உட்பட மற்ற விமான நிறுவனங்கள் இதுவரையில் இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாததால் பயணிகள் தொடர்ந்து குழப்பத்தில் இருக்கின்றனர்.