ETV Bharat / state

பழங்குடியினர் சான்று அளிப்பதில் திருப்பத்தூர் மாவட்டம் முன்னோடி: அமைச்சர் எ.வ.வேலு பெருமிதம்! - Jolarpet

Minister E.V Velu: திருப்பத்தூர் மாவட்ட ஆட்சி தலைவர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் மும்முனைகளாக இருந்து மாற்றுத்திறனாளிகள் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகுக்கின்றனர் என்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் எ.வ வேலு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 5, 2024, 11:26 AM IST

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் எ.வ வேலு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 2 கோடியே 24 லட்சத்து 21 ஆயிரத்து 150 ரூபாய் மதிப்பில் நலத்திட்டங்கள் வழங்கும் விழா திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளாராக பங்கேற்ற நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார். அதன் பின்னர் விழாவில் பேசிய அவர், “நான் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக பொறுப்பேற்ற உடனே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை ஆய்வு கூட்டத்தை நடத்தி வங்கிகள் எல்லாம் இளைஞர்களுக்கு, பட்டதாரிகளுக்கு, ஏழை விவசாயிகளுக்கு உதவ வேண்டும் ஆணை பிறப்பித்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் இளைஞர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு விவசாயிகளுக்கு உரிய கடன் கொடுப்பதிலும் நமது மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்றது.

திருவண்ணாமலை மாவட்ட அமைச்சராகவும், திருப்பத்தூர் மாவட்ட அமைச்சராகவும், நெடுஞ்சாலை துறை அமைச்சராகவும் உள்ளாதால், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று விபத்தை எப்படி குறைப்பது என அனைத்து மாவட்ட ஆட்சியரிடத்திலும் ஆய்வு கூட்டம் நடத்துகின்றேன். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற உடனே மலைவாழ் மக்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏறக்குறைய 11 ஆயிரம் மலைவாழ் மக்களுக்கு எஸ்டி சான்றிதழ்கள் வழங்கியுள்ளார்.

இதையும் படிங்க: நாட்டில் முதலீடு செய்ய முதலில் தமிழ்நாட்டின் கதவைத் தட்டும் நிறுவனங்கள் - அமைச்சர் டிஆர்பி ராஜா

எனக்கு தெரிந்து தமிழ்நாட்டிலேயே எஸ்டி சான்றிதழ் அளிக்கும் மாவட்டத்தில் முதல் மாவட்டமாக திருப்பத்தூர் இருக்கிறது என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கின்றேன். மேலும் மாற்றுத்திறனாளிகளின் வளர்ச்சியில் தமிழக அளவில் 6 ஆம் இடத்தில் திருப்பத்தூர் மாவட்டம் உள்ளது. அதற்காக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மும்முனையாக பணியாற்றி வருகின்றனர்.

மேலும் ஒரு படியாக மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளிகளுடன் உண்டு அவர்களின் குறைகளை கேட்பதை நான் அறிகின்றேன்” என பேசினார். மேலும் இந்த விழாவில் தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: முதலமைச்சர் காணொளியில் பங்கேற்ற நிகழ்ச்சி.. கலந்துகொள்ளாத அதிகாரிகள் காலியாக இருந்த சேர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.