ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருந்து மினி லாரி மூலம், நான்கு டன் மீன்களை ஏற்றி வந்த வாகனம் பச்சகுப்பம் ரயில்வே மேம்பாலம் அருகில் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஐஸ் பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மீன்கள் சாலையில் கொட்டியது. இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் காயமுற்றார். சாலையில் சென்றவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதற்கிடையில் சாலையில் மீன் லாரி கவிழ்ந்த விஷயம், காட்டுத் தீப் போல் பரவியது. இதையடுத்து அங்க குவித்த கிராம மக்கள் மீன்களை போட்டிப்போட்டு அள்ளிச்சென்றனர்.
இந்த விபத்து குறித்து ஆம்பூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: ராமநாதபுரத்தில் கரோனா பாதிப்பு - மதியம் வரை மட்டுமே கடைகள் இயங்கும்!