திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்துக்கு உள்பட்ட கஜல் நாயக்கம்பட்டி பகுதியிலிருந்து, கந்திலி காவல் நிலையம் வரை, அப்பகுதியில் உள்ள திமுக தொண்டர்கள், திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளை கொண்டாட இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து ஊர்வலம் சென்றனர்.
அப்போது திமுக தொண்டர்கள் வெடித்த பட்டாசு பொறி, அங்கிருந்த எம்ஜிஆர் சிலை மீது விழுந்தது. இந்நிலையில், தேர்தல் விதிமுறைக்காக போற்றப்பட்டிருந்த துணி பற்றி எரிந்தது.
இதனால் எம்ஜிஆர் சிலை விரிசல் ஏற்பட்டு சேதமடைந்தது. தகவலறிந்த அதிமுக தொண்டர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் உடனடியாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
![எம்ஜிஆர் சிலை பற்றி எறிந்து](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tpt-01-mgr-statue-fire-vis-scr-pic-tn10018_01032021125223_0103f_1614583343_716.jpg)
இருப்பினும் சுதாரித்துக்கொண்ட திமுக தொண்டர் நாகராஜ் என்பவர், தவறுதலாக அசம்பாவிதம் ஏற்பட்டு விட்டது என்றும், எம்ஜிஆர் சிலைக்கு மீண்டும் வர்ணம் பூசி புதுப்பித்து தருகிறோம் என்றும் உத்தரவாதம் கொடுத்தார்.
பின்பு எம்ஜிஆர் சிலை காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதால், அதிமுக தொண்டர்கள் சற்று சமாதானம் அடைந்ததின் காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. இரு தரப்பினரும் சமாதானம் அடைந்ததால் காவல் துறை வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் மாதம் தேர்தல் நடக்கவிருக்கும் சூழ்நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பனை நுங்கை ருசித்து சாப்பிட்ட ராகுல் காந்தி!