கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (27). திருமணமாகி, மனைவியைப் பிரிந்த நிலையில், சென்னையில் தங்கி ஓட்டுநராகப் பணியாற்றிவருகிறார். இந்நிலையில் வெங்கடேஷுக்கு, எழில்மதி (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த, ஒரு ஆண்டாக இருவரும் காதலித்துவந்தனர். இச்சூழலில், எழில்மதியைப் பார்ப்பதற்காக சென்னையிலிருந்து திருப்பூருக்கு வெங்கடேஷ் சென்றார்.
வளர்மதி பாலம் அருகே உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த வெங்கடேஷை பார்க்க, எழில்மதி சென்றார். அப்போது, இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த வெங்கடேஷ், எழில்மதியின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு, தானும் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
தற்போது இருவரும் அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். புகாரின்பேரில், வெங்கடேஷ் மீது தெற்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.