ETV Bharat / state

திமுக அமோக வெற்றி: உச்ச மகிழ்வில் உடன்பிறப்புகள்

author img

By

Published : Oct 13, 2021, 11:50 AM IST

தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்றும், பல இடங்களில் முன்னிலை வகித்தும் வருகிறது.

திமுக
திமுக

தமிழ்நாட்டில் அக்டோபர் 6, 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம்

வேலூரிலிருந்து பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் ஆயிரத்து 779 பதவியிடங்களும், கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களில் 208 பதவியிடங்களும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களில் 125 பதவியிடங்களும், மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களில் 13 பதவியிடங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது.

இதில், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் 177, ஊராட்சி மன்றத் தலைவர்களில் 3 வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

வெற்றி
ஒன்றிய கவுன்சிலர் மாவட்ட கவுன்சிலர்
திமுக 69 9
அதிமுக 33 -

காலை 10 மணி நிலவரப்படி மொத்த உள்ள 13 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் ஒன்பது இடங்களில் திமுக வெற்றிபெற்றுள்ளது. மேலும், மொத்த உள்ள 125 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 68 திமுக இடங்களிலும் வெற்றி, அதிமுக 32 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. பாஜக 1, தேமுதிக 1 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. மேலும், திமுக 28 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: 'இந்தப் படை ஒன்றே வெல்லும் படை' என்பதை புதிய மொழியாக்கிப் புறப்பட்ட உ.பி.க்களே! - மகிழ்வில் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.