திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன். இவர் கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி மாணவி மரணம் தொடர்பாக எதிர்மறையான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதாக வளையாம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் விக்ரம் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த கோட்டீஸ்வரனை பெங்களூர் பகுதியில் கைது செய்தனர்.
மேலும், இதுபோன்ற வதந்திகளை சமூக வலைதளங்களில் பரப்பும் செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.