ETV Bharat / state

நின்றுகொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து - ஆம்பூர் அரசு மருத்துவமனை

திருப்பத்தூர்: சாலையில் நின்றுகொண்டிருந்த லாரியின் பின்பக்கம் மற்றொரு லாரி மோதிய விபத்தில் படுகாயமடைந்த நபர் ஒருவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

lorry accident held in tirupattur
lorry accident held in tirupattur
author img

By

Published : Nov 1, 2020, 4:51 PM IST

Updated : Nov 1, 2020, 5:16 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காட்பாடியிலிருந்து திருப்பத்தூருக்கு தனியாருக்கு சொந்தமான இரு லாரிகள் சிமெண்ட் லோடு ஏற்றிச் சென்று கொண்டிருந்தன. அதில் ஓர் லாரியின் டயர் வெடித்த காரணத்தால் பழுது பார்ப்பதற்காக இரண்டு லாரிகளும் சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

lorry accident held in tirupattur
விபத்திற்குள்ளான லாரி

அப்பொழுது ஸ்ரீபெரும்பத்தூரில் இருந்து மும்பைக்கு பெயின்ட் லோடு ஏற்றிச்சென்ற லாரி, சாலையின் ஓரம் நின்றுகொண்டிருந்த சிமெண்ட் லாரியின் பின்பக்கம் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் பெயின்ட் லோடு ஏற்றிவந்த லாரி ஓட்டுநருக்கு கால்முறிவு ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

lorry accident held in tirupattur
சேதமடைந்த லாரி

மேலும் இவ்விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Last Updated : Nov 1, 2020, 5:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.