திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள எம்எம் ரெட்டி தெருவில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியம் (42). இவர் வாட்டர் சர்வீஸ் மற்றும் டிராவல்ஸ் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று (அக்டோபர் 9) பாலசுப்பிரமணியம், குடும்பத்தினருடன் தனது சகோதரியை பார்க்க ஓசூர் சென்றார். இதனையறிந்த அடையாளம் தெரியாத நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை, மூன்று கிலோ வெள்ளி, 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதையடுத்து, இன்று (அக்டோபர் 12) காலை பக்கத்து வீட்டில் வசிக்கும் தண்டபாணி என்பவர் பாலசுப்பிரமணியம் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக பாலசுப்பிரமணியத்திற்கு தகவல் தெரிவித்தார்.
அதன் பிறகு ஓசூரில் இருந்து வந்த பாலகிருஷ்ணன், இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.