திருப்பத்தூர் : ஆம்பூர் அருகேயுள்ள தமிழ்நாடு- ஆந்திர எல்லைப் பகுதியான மாத கடப்பா, அரங்கல்துருகம் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சப்படுகிறது.
இந்தச் சாராயத்தை ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களுக்கு இருசக்கர வாகனங்களில் சாராயம் பாக்கெட்டுகள் மூட்டைகைகளிலும், கேன்களில் கொண்டுவரப்பட்டு கள்ளத்தனமாக விற்பனை செய்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்திக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் பேரில் அவர் தலைமையிலான தனிப்படை காவலர்கள் ஆம்பூர் அடுத்த கதவாளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் இரண்டு மூட்டைகளை வைத்து வந்துகொண்டிருந்த சாராய வியாபாரி, தனிப்படை காவலர்கள் இருப்பதைக்கண்டு சிறிது தூரத்தில் சாலையில் வாகனத்தை விட்டு விட்டு தப்பியோடியுள்ளார்.
பின்னர் அதனை பறிமுதல் செய்த காவலர்கள் இரண்டு மூட்டைகளில் இருந்து 200 சாராய பாக்கெட்டுகளை சாலையில் போட்டு அழித்தனர். மேலும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த தனிப்படை காவலர்கள் தப்பியோடிய சாராய வியாபாரியை தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க : மது கடத்தல்: 148 பேர் கைது