திருப்பத்தூர்: நகராட்சிக்கு உட்பட்ட நீர் பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ள குடியிருப்புகளை மாவட்ட நிர்வாகமும் பொதுப்பணித்துறையும் அப்புறப்படுத்தி வருகின்றனர். திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட தண்டபாணி கோயில் தெரு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் இரவு நேரத்தில் புதுப்பேட்டை ரோடு அண்ணா சிலை அருகே சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி வீட்டிற்கு முன்பு தங்களுக்கு மாற்று இடம் கிடைக்கும் வரையில் எங்கள் குடியிருப்புகளை அப்புறப்படுத்த கூடாது என்று கோரிக்கை வைத்து முற்றுகையிட்டனர்.
இதனை தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தைக்கு உடன்படாத பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினர் இல்லத்தை தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பும் சுமார் ஒரு மணி நேரம் முற்றுகையிட்டனர்.
இதனை தொடர்ந்து திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் கனேஷ் வட்டாட்சியர் சிவப்பிரகாசம் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகையிட்டு உள்ளதால் அப்பகுதி முழுவதும் பரபரப்புடன் காணப்பட்டது.
இதையும் படிங்க: கர்நாடகத்தில் கொத்தடிமைகளாக இருந்த ஆம்பூர் இருளர்கள் மீட்பு