திருப்பத்தூர்: கியூ பிரிவு பெண் காவல் ஆய்வாளரிடம் 7 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சின்னகம்மியம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்த சம்பத்குமார் மனைவி புனிதா(45). இவர் காவல்துறையின் கியூ பிரிவில் பெண் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் நேற்று பணியை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது, சின்னகம்மியம்பட்டு ஊராட்சி மன்ற அலுவலரின் அலுவலகம் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இருவர், தங்களுடைய வாகனத்தின் முகப்பு விளக்கின் வெளிச்சத்தை மிகைப்படுத்தி அடித்ததால் நிலைகுலைந்த பெண் காவல் ஆய்வாளர், தொடர்ந்து இரு சக்கர வாகனத்தை இயக்க முடியாமல் நிறுத்தியுள்ளார்.
உடனடியாக பக்கத்தில் வந்த அந்த நபர்கள், பெண் காவல் ஆய்வாளரின் கழுத்தில் இருந்த ஏழு சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.
இரவு நேரம் என்பதால் பெண் காவல் ஆய்வாளர் செய்வதறியாமல் திகைத்து நின்றுள்ளார். கழுத்தில் இருந்து சங்கிலி பறிக்கப்படும்போது காவல் ஆய்வாளருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோடியூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்குச் சென்று அவர் சிகிச்சை பெற்றுள்ளார்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் லட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். காவல் ஆய்வாளரிடம் இருந்தே நகை பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
காவல் ஆய்வாளரிடம் 7 சவரன் நகை கொள்ளை - மக்கள் அச்சம்! - கியூ பிராஞ்ச் பெண் காவல் ஆய்வாளரிடம் கழுத்தில் இருந்த 7 சவரன் தங்க நகை வழிப்பறி! கொள்ளையர்கள் கைவரிசை....