திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பார்சாம்பட்டி பகுதியில் அமைந்துள்ள ரயில்வே கேட்டினால் அப்பகுதி மக்கள் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையிக்கு செல்லும் வேளையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.
அதனால் அப்பகுதி மக்கள் ரயில்வே மேம்பாலம் அமைத்து தருமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்துவந்தனர்.
அதையடுத்து அமைச்சர் வீரமணியின் முயற்சியினால் ரூ.27 கோடி மதிப்பில் புதிதாக ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. அதனை நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சியின் மூலம் திறந்து வைத்தார்.