திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து செயல்படும் ஜாயின்ட் ஆக்ஷன் கமிட்டி என்ற அமைப்பு சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தின்போது செய்தியாளர்களை சந்தித்த ஜாயின்ட் ஆக்ஷன் கமிட்டி ஒருங்கிணைப்பு குழு தலைவர் நாசீர்கான், ”சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்திய போராட்டத்தின்போது உயிரிழந்த பஸ்லுல் ஹக் என்ற முதியவரின் குடும்பத்தினருக்கு ரூ.5 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். அதற்கு காரணமான அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் அனைத்து கட்சிகள், அமைப்புகளை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப்படும். மேலும், சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
இல்லையென்றால் வரும் 19ஆம் தேதி இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் சட்டபேரவை முற்றுகை போராட்டம் நடத்தப்படும்” என்றார்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு கண்டனக் கூட்டத்தில் பழ. கருப்பையா பங்கேற்பு