திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ரங்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பக்தவச்சலம். இவர், தனக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்தும், பால் வியாபாரம் செய்தும் வருகிறார். பக்தவச்சலம் நேற்றிரவு (பிப்.21) வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன், திருமணத்திற்கு சென்றுவிட்டார்.
திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு நேற்று (பிப்.22) வீடு திரும்பிய அவர், வீட்டின் வெளிப்புற பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் இரண்டு அறைகளில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் இருந்த 5 சவரன் நகை, 1 லட்சம் ரூபாய் பணம் மாயமானது தெரியவந்தது.
இது குறித்து ஆம்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: டீ குடித்தபடி பல்ப் திருடும் ஆசாமி - சிசிடிவி காட்சி வைரல்