ETV Bharat / state

வெள்ளத்தில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட ஜேசிபி இயந்திரம் - நல்வாய்ப்பாக மூவர் உயிர் தப்பினர் - வெள்ளத்தில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட ஜேசிபி இயந்திரம் நல்வாய்ப்பாக மூவர் உயிர் தப்பினர்

ஆம்பூர் அருகே ஜேசிபி இயந்திரம் மூலம் மழை வெள்ளத்தால் தரைப்பாலத்தில் தேங்கிய குப்பையை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஜேசிபி இயந்திரம் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டது (JCB machine swept away) . நல்வாய்ப்பாக அதில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.

வெள்ளத்தில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட ஜேசிபி இயந்திரம்

author img

By

Published : Nov 22, 2021, 5:28 PM IST

திருப்பத்தூர்: தமிழ்நாடு (Tamilnadu) முழுவதும் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழை பெய்து சாலைகள், வீடுகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக நரியம்பட்டு - குடியாத்தம் தரைப்பாலம் மூழ்கி வெள்ள நீர் ஓடுகிறது. இதனால் தரைப்பாலத்தில் வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட ஜேசிபி இயந்திரம்

மழை வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட தென்னை மரங்கள், குப்பைகள் தரைப்பாலத்தில் சிக்கி நீர் செல்ல தடை ஏற்பட்டது.

மழை பொழிவு தற்போது குறைந்துள்ளதால் ஊராட்சி மன்றம் சார்பில் ஜேசிபி இயந்திரம் (JCB machine) கொண்டு பாலத்தில் தேங்கிய குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஜேசிபி இயந்திரம் கவிழ்ந்து சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டது. இதில் ஜேசிபி இயந்திரத்தில் இருந்த ஓட்டுநர் உள்பட மூன்று பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

இதையும் படிங்க: ஐந்து மாவட்டங்களில் கனமழை...!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.