ETV Bharat / state

காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்.. திருப்பத்தூரில் நடந்தது என்ன? - Tirupattur news in tamil

திருப்பத்தூர் அருகே சாதி மறுப்பு திருமணம் செய்துக்கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு கிராமிய காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்.. திருப்பத்தூரில் நடந்தது என்ன?

author img

By

Published : Nov 15, 2022, 1:52 PM IST

திருப்பத்தூர் அடுத்த கோணப்பட்டு பகுதியை சேர்ந்த கணேசன் மகன் சக்திவேல் (27) வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகள் ரூபினி (23) சேலத்தில் செவிலியர் ஆக பணிபுரிந்து வருகிறார்.

சக்திவேல் - ரூபினி இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். வெவ்வேறு சமூகம் என்பதால் காதலுக்கு பெண் வீட்டார் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காதல் ஜோடி வீட்டை வெளியேறி திருத்தணி முருகன் கோயிலில் திருமணம் செய்துக்கொண்டனர்.

ரூபியினியை காணவில்லை என அவரது பெற்றோர் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதை அறிந்த சக்திவேல், தனது மனைவி ரூபினியுடன் பாதுகாப்பு கேட்டு அதே காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளார்.

இதையும் படிங்க: கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பு: ரூ.10 லட்சம் நிவாரணம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.