திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர், ஷக்கில். இவருக்கு திருமணம் ஆகி 1 வருடம் ஆன நிலையில் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில் இவரது மனைவி சித்திகா பர்வீன் ஷக்கீலின் வீட்டில் தனது 6 மாத பெண் குழந்தையுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் இன்று(பிப்.10) சித்திகா பர்வீன் குளிப்பதற்காக வீட்டின் குளியலறையில் உள்ள வாட்டர் ஹீட்டரை உபயோகித்த போது, எதிர்பாராவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் சித்திகா பர்வீன் சம்பவ இடத்திலேய மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக சித்திகா பர்வீனை மீட்ட அவரது உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
பின்னர், இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த வாணியம்பாடி நகர காவல்துறையினர் இந்நிகழ்வு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வாட்டர் ஹீட்டரிலிருந்து மின்சாரம் பாய்ந்து 6 மாத பெண் குழந்தையின் தாய் உயிரிழந்த நிகழ்வு வாணியம்பாடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கண்டக்டர் ஃபிட்னஸ் தேர்வில் அதிர்ச்சி சம்பவம் - எடையை அதிகரிக்க உடலில் இரும்பைக் கட்டி வைத்த தேர்வர்கள்!