திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா, வெங்கடசமுத்திரம்-ஆம்பூர் கூட்டுச்சாலையில் பல ஆண்டுகளாக மளிகைக்கடை நடத்திவருகிறார்.
கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்றுப் பரவல் காரணமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் திருப்பத்தூரில் கரோனா தீநுண்மி தொற்றைக் கட்டுப்படுத்த காலை 6 மணிமுதல் 2 மணிவரை மட்டுமே அனைத்துக் கடைகளும் இயங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் பல கடைகள் 2 மணிக்கு மூடப்பட்ட நிலையில் வெங்கடசமுத்திரம் பகுதியில் இயங்கிவரும் ராஜா என்பவரது மளிகைக் கடை ஊரடங்கை மீறி மாலை 4 மணிவரை இயங்கிவந்துள்ளது.
இந்நிலையில் வெங்கடசமுத்திரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்த உமராபாத் காவல்நிலைய எழுத்தாளர் ரகுராமன், ஊரடங்கை மீறி இயங்கிவந்த மளிகைக் கடைக்குச் சென்று ஆத்திரத்தில் அங்கிருந்த எடை பார்க்கும் இயந்திரத்தை வெளியே வீசி எறிந்து கடையை மூடும்படி எச்சரிக்கைவிடுத்தார். பின்னர் மளிகைக்கடை மூடப்பட்டது. இந்நிகழ்வு அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க...'தூங்கி எழுந்ததும் கரோனாவால இன்னொரு சாவு விழுந்துடக் கூடாதுனு மனசு தவிக்குது' - மயான ஊழியர் உருக்கம்