திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு அருகே உள்ள சுகாதார நிலைய ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருபவர் முத்துக்குமரன்.
இவரது மனைவி நிம்மியம்பட்டு பகுதியில் கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இருவரும் காலையில் வழக்கம்போல் பணிக்குச் சென்றுவிட்ட நிலையில், பிற்பகல் அவரது வீட்டில் தீப்பற்றி எரிவதைக் கண்டு, ஆலங்காயம் தீயணைப்பு துறைக்கும், காவல் துறைக்கும், முத்துக்குமரனுக்கும் அக்கம்பக்கத்தினர் தகவல் அளித்தனர்.
தகவலின்பேரில் ஆலங்காயம் தீயணைப்புத் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் அரை மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த 7 சவரன் நகைகள், பொருள்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமானது. தீ விபத்து குறித்து ஆலங்காயம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சுகாதார நிலைய ஒப்பந்த ஊழியர் வீட்டில் தீ விபத்து: போலீசார் விசாரணை - சுகாதார நிலைய ஒப்பந்த ஊழியர்
திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே சுகாதார நிலைய ஒப்பந்த ஊழியர் வீட்டில் மின் கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் பொருள்கள், ஆவணங்கள் எரிந்து சேதமாகின.