திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர்ப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பதுக்கிவைத்துள்ளதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்படி, அப்பகுதி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கமலக்கண்ணன் தலைமையிலான காவல் துறையினர், அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, சந்தேகத்தின் அடிப்படையில் சிவலிங்கம் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் சோதனை செய்தனர்.
அப்போது அட்டைப் பெட்டிகளில் பதுக்கி வைத்திருந்த ஹான்ஸ், குட்கா போன்ற போதைப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
வீட்டில் சோதனை நடைபெறுவதை அறிந்த சிவலிங்கம் தலைமறைவானார். அதன்பின்னர் பதுக்கி வைத்திருந்த போதைப் பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்ததோடு, சிவலிங்கத்தின் மீது வழக்குப்பதிவு செய்து, அவரைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பழனி அருகே கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது