திருப்பத்தூர் மாவட்டம் பள்ளிக்கொண்டா அருகே கந்தனேரி என்ற இடத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்ததில் காரில் சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருள்கள் கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து திருவண்ணாமலை, ஆரணிக்கு கடத்தி வரபட்டது தெரியவந்தது.
குட்கா கடத்தி வந்த ஆரணி பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ஆதவன் என்பவரை காவல் துறையினர் கைது செய்யப்பட்டு காரையும் பறிமுதல் செய்தனர்.
அதேபோல், அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி சோதனை செய்ததில் அதில் 74 மது பாட்டில்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மூலகேட் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரை காவல் துறையினர் கைது செய்து இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: கன்னியாகுமரியில் 350 கிலோ குட்கா பறிமுதல்!