ETV Bharat / state

ஜனநாயக உரிமை மறுப்பா? - தேர்தல் பணிக்குச் சென்றோர் பரிதவிப்பு - திருப்பத்தூர் மாவட்டச் செய்திகள்

தேர்தல் பணிக்காகச் சென்ற அங்கன்வாடி, சத்துணவு உதவியாளர்கள், சமையலர்கள் அஞ்சல் வாக்கு செலுத்த முடியாமல் பரிதவித்தனர். அவர்கள் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்ட அனுமதிக்குமாறு வலியுறுத்தினர்.

ஜனநாயக உரிமை மறுப்பா?
ஜனநாயக உரிமை மறுப்பா?
author img

By

Published : Oct 9, 2021, 9:39 AM IST

Updated : Oct 9, 2021, 9:46 AM IST

தமிழ்நாட்டில் புதியதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடிவுசெய்து முதற்கட்டமாக திருப்பத்தூரில் நான்கு ஒன்றியங்களுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் ஆலங்காயம் மாதனூர் ஒன்றியங்களுக்கு நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகத்தினால் முதல்கட்ட வாக்குப்பதிவில் ஆறாயிரத்து 311 அரசுப் பணியாளர்கள் தேர்தல் பணிக்கு அமர்த்தப்பட்டனர். இந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி அரசுப் பணியாளர்கள் அஞ்சல் வாக்குச் செலுத்திக் கொள்ளலாம் எனப் படிவம் 15 ஐ பூர்த்திசெய்துள்ளனர்.

முறையாகத் தெரிவிக்கப்படாத தகவல்

அதனைத் தொடர்ந்து கடந்த 4ஆம் தேதி பூர்த்திசெய்தவர்கள் மட்டும் அஞ்சல் வாக்கினைச் செலுத்தினர் எனவும், ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் தேர்தல் பணிக்குச் சென்ற அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு சமையலர்கள், உதவியாளர்கள் என 347 பணியாளர்கள் ஜனநாயகக் கடமையான தங்களது வாக்கினைச் செலுத்த முடியாமல் பரிதவித்துவருகின்றனர்.

இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பணியாளர்கள் கேட்டபொழுது, கடந்த 4ஆம் தேதி படிவம் 15ஐ பூர்த்திசெய்தவர்கள் மட்டும் அஞ்சல் வாக்கினைச் செலுத்திக் கொள்ளலாம் எனவும், பூர்த்திசெய்யாத பணியாளர்கள் தங்களது வாக்கினைச் செலுத்த முடியாது எனக் கூறியதால் வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஜனநாயக உரிமை மறுப்பா?
ஜனநாயக உரிமை மறுப்பா?

பின்பு இது குறித்து விசாரிக்கையில், அங்கன்வாடி அமைப்பாளர்களுக்கு இது குறித்த முழுத் தகவலையும் கலந்தாய்வு வைத்து சொல்லியும் அவர்கள் முறையாக அங்கன்வாடி பணியாளர்கள், சமையலர்களுக்கு கடந்த 4ஆம் தேதி படிவம் 15 ஐ பூர்த்திசெய்தவர்கள் மட்டும் அஞ்சல் வாக்கு அளிக்கலாம் என்பது குறித்த தகவலை முறையாகத் தெரிவிக்காமல் விட்டுவிட்டனர்.

ஜனநாயகம் - யார் பதில் கூறுவார்கள்?

இதனால் நேற்று 347 அரசுப்பணியாளர்கள் தங்களுடைய ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற முடியாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர் என்கிற தகவல் தெரியவந்துள்ளது.

ஜனநாயக உரிமை மறுப்பா?
ஜனநாயக உரிமை மறுப்பா?

ஆகிலும் தேர்தல் பணிக்காகச் சென்ற அரசு ஊழியர்களாகிய எங்களுக்கே எங்களது வாக்கினைச் செலுத்தி

  • ஜனநாயகக் கடமையை ஆற்ற முடியவில்லையே என்கிற 347 பேரின் ஆதங்கத்திற்குப் பதில் கூறுபவர்கள் யார்?
  • யார் இந்த குளறுபடிகளுக்கெல்லாம் மணி கட்டுவார்கள்?

என்பதே அவர்களின் மிகப்பெரிய கேள்வியாக இருந்தது.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல்: தொடங்கியது 2ஆம் கட்ட வாக்குப்பதிவு

Last Updated : Oct 9, 2021, 9:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.