ETV Bharat / state

அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு - பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்த தாசில்தார்!

திருப்பத்தூர்: ஏலகிரி மலையில் அரசு புறம்போக்கு இடத்தில் சடலத்தை புதைக்க அங்குள்ள ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Government alienated land occupation - Dasildar put an end to the problem!

author img

By

Published : Oct 7, 2020, 3:26 AM IST

ஏலகிரி மலையில் உள்ள மேட்டுகணியூர் கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதி மக்கள் இறப்பவர்களை அவர்களது சொந்த நிலத்தில் அல்லது பொது இடங்களிலும் புதைத்து வந்தனர்.

ஆனால் இந்த ஊரில் இறப்பவர்களின் சடலத்தை புதைக்க நிலாவூர் செல்லும் சாலையில் சுமார் நான்கரை ஏக்கருக்கு மேல் அரசு புறம்போக்கு இடம் உள்ளது.

சமீபகாலமாக நிலம் உள்ளவர்கள் அவரவர்களது நிலத்திலேயே சடலத்தை புதைத்து விடுவதால், நிலம் இல்லாதவர்கள் சடலத்தை புதைக்க அவதிக்குள்ளாகினர்.

இந்நிலையில் கடந்த வாரம் மேட்டு கணியூர் பகுதியில் உடல்நலக்குறைவால் முதியவர் ஒருவர் இறந்துள்ளார். அவரது சடலத்தை நிலாவூர் அருகேவுள்ள அரசு நிலத்தில் அடக்கம் செய்ய அப்பகுதியினர் கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் அங்கு சடலத்தை அடக்கம் செய்ய சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் அரசு பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து வந்த ஏலகிரி காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடையே சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மேலும் அதன்பிறகு சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் தாசில்தார் மோகன் வருவாய் ஆய்வாளர் சிலம்பரசன், கிராம நிர்வாக அலுவலர் மஸ்தான் ஆகியோர் சுடுகாட்டு பகுதிக்கு வந்து சடலத்தை புதைக்க எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் யார் எனக் கேட்டறிந்து விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் அப்பகுதி மக்கள் இந்த சுடுகாட்டு இடத்தை அளவீடு செய்து சுற்று சுவர் எழுப்ப வேண்டும் எனவும், இங்கு எரி மேடை அமைத்து சடலத்தை சுடுகாட்டிற்கு கொண்டு வர வாகன வசதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து தாசில்தார் மோகன் முதலாவதாக இந்த சுடுகாட்டிற்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்து, மொத்தம் உள்ள இடத்தை உறுதிப்படுத்திக் கொண்டு சுற்றுச்சுவர் மற்றும் எரிமேடை அமைக்க ஏற்பாடுகள் செய்யவேண்டும் என உத்தரவிட்டார். 10 ஆண்டுகளுக்கு முன்பு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் முன்னிலையில், தற்போது இப்பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ள தாசில்தாருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

இதையும் படிங்க:ரூ.6 லட்சத்தைத் திருப்பி கொடுக்காத எஸ்ஐ - தற்கொலைக்கு முயன்ற இளைஞர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.