ETV Bharat / state

மளிகை கடைக்கார பெண்ணின் 7 சவரன் தங்கச் சங்கிலி பறிப்பு

ஆம்பூர் அருகே அடையாளம் தெரியாத இளைஞர் சிகரெட் வாங்குவது போல் மளிகை கடைக்கார பெண்ணின் கழுத்தில் இருந்த 7 சவரன் தங்க சங்கிலியை பறித்துச்‌ சென்றார்.

Chain snatch from groçery shop girl
Chain snatch from groçery shop girl
author img

By

Published : Jul 12, 2021, 7:38 AM IST

Updated : Jul 12, 2021, 7:46 AM IST

திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த உமாராபாத் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத். இவர் தனது வீட்டிற்கு வெளியே மளிகை கடை நடத்தி வருகிறார். இன்று காலை அவரது மனைவி அலமேலு கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் சிகரெட் வாங்கியுள்ளார். பின்னர் அதற்கான பணத்தைக் கொடுத்துவிட்டு ஷாம்பு வேண்டுமென கேட்டு உள்ளார்.

அப்போது அலமேலு ஷாம்புவை எடுத்து வர முயன்றபோது, கடைக்குள் நுழைந்த இளைஞர் அவரை தாக்கி கழுத்தில் இருந்த சுமார் 7 பவுன் மதிப்பிலான தங்க சங்கிலியை பறித்து கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றார்.

இதுகுறித்து உமராபாத் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் ஆய்வாளர் நிர்மலா தலைமையிலான காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் பொறுத்தபட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கைபற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : மேகதாது அணை பிரச்னை தொடர்பாக இன்று அனைத்து கட்சிக் கூட்டம்

Last Updated : Jul 12, 2021, 7:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.