திருப்பத்தூர்: ஆம்பூர் புறவழிச்சாலைப் பகுதியில் தனியார் வணிக வளாகத்தில் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா ஏடிஎம் இயங்கிவருகிறது. இதனிடையே இன்று (டிசம்பர் 8) காலை வங்கியிலிருந்து புகை வருவதாக அவ்வழியாக நடைப்பயிற்சி மேற்கொண்டவர்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
அத்தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் அதற்குள் தீ மளமளவென வங்கி முழுவதும் பரவியதில் ஐந்து குளிர்சாதனப் பெட்டிகள், ஒரு கணினி உள்ளிட்ட மின்சாதன பொருள்கள் தீயில் கருகி நாசமாகின.
இந்தத் தீ விபத்து குறித்து ஆம்பூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: கோவையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்!