திருப்பத்தூர்: மாவட்ட ஆட்சியர் புதிய கட்டட வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாதந்தோறும் நடைபெறுவது வழக்கம். இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி ஆம்பூர் ஆலங்காயம் கந்திலி நாற்றம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்களுடைய குறைகளை கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர்.
இதன் பின்பு துறை அதிகாரிகளை அழைத்து மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண உத்தரவிடப்பட்டது.
இந்த கூட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:26 மணிநேர நீண்ட தூரப்பயணம்... சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸில் சென்னை வந்த மூதாட்டி!