ETV Bharat / state

திருப்பத்தூர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் சிறப்பம்சங்கள் என்ன? - புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலத்தை ஸ்டாலின் திறந்து வைத்தார்

திருப்பத்தூரில் ரூ.109.71 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சிறப்பம்சங்கள்
சிறப்பம்சங்கள்
author img

By

Published : Jun 29, 2022, 3:48 PM IST

திருப்பத்தூரில் கட்டப்பட்டு வந்த புதிய மாவட்ட அலுவலக கட்டுமானப்பணிகள் நிறைவடைந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மாவட்ட வனத்துறைக்குச்சொந்தமான இடத்தில் புதிய ஆட்சியர் அலுவலகம் ரூ.109.71 கோடி மதிப்பில் கட்ட தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கானப் பணிகள் முடிவடைந்தன.

அதன்படி, புதிதாக கட்டப்பட்ட திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 7 அடுக்குத் தளங்களாக 62 அனைத்துத்துறை அரசு அலுவலகங்களும் இடம்பெற்றுள்ளன. கிட்டத்தட்ட 200 பேர் அமரும் வகையில் பெரிய கூட்டரங்கம், 300 இருக்கைகள் கொண்ட குறை தீர்வுக்கூட்ட அரங்கம், 3 சிறிய கூட்டரங்கங்கள், கழிவறை, செயற்கை நீருற்றுடன் கூடிய பூங்கா, கட்டடத்தை சுற்றிலும் சாலை வசதி, நடைபாதை ஆகியவை உள்ளன.

மாற்றுத்திறனாளிகளுக்கு சாய் தளம், மழைநீர் வடிகால் அமைப்பு அலங்கார மின்விளக்குகள், குடிநீர் வசதி, முகப்பு அலங்கார வளைவு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கோரிக்கை மனுக்களுடன் வரும் பொதுமக்கள் அரசு அலுவலர்களை தங்கிப் பார்க்க தங்குமிடமும் அவ்வாறு தங்கும் நேரத்தில் பசியாற்றுவதற்காக கேண்டின் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்களுடன் கூடிய திருப்பத்தூர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

இதையும் படிங்க: மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அடிக்கல் நாட்டு விழா.. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.