திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சின்னவரிகம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். கட்டட மேஸ்திரி. இன்று ( ஜூன் 6) காலை அதே பகுதியில் சந்திரன் என்பவர் வீட்டில் கழிவு நீர் தொட்டி அமைக்க குழி தோண்டும் பணியில் வெங்கடேசன் ஈடுபட்டிருந்தார்.
அப்போது குழியின் அருகில் இருந்த மின்சார கம்பியை அப்புறப்படுத்த வெங்கடேசன் முயன்ற போது, எதிர்பாராவிதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உமராபாத் காவல்துறையினர் வெங்கடேசனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.