ETV Bharat / state

மனைவிக்கு வளைகாப்பு முடித்து திரும்பிய ஊழியர்... மின்சாரம் தாக்கி உயிரிழப்பு - மின்வாரிய ஊழியர்

மனைவியின் வளைகாப்பை முடித்துவிட்டு பணிக்கு திரும்பிய மின்வாரிய ஊழியர், டிரான்ஸ்பார்ம் பழுதை ரி செய்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழப்பு
மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழப்பு
author img

By

Published : Nov 12, 2022, 2:15 PM IST

திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அருகே இடையம்பட்டி காந்தி ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் முருகன் என்கிற முருகேசன்(32). இவர் ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் இயங்கி வரும் மின்வாரிய அலுவலகத்தில் கடந்த இரண்டு வருடமாக ஊழியராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, தற்போது அவரது மனைவி 6 மாதம் கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் மனைவிக்கு நேற்று வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு முழுவதும் பலத்த மழை பெய்து வரும் நிலையில், ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகம் அருகே மங்கம்மாள் குளம் இடத்தில் செயல்பட்டு வரும் ஊதுபத்தி நிறுவனத்தில் திடீரென மின்சாரம் தடைபட்டது. இதனை சரி செய்ய அப்பகுதியில் பணிபுரியும் லைன் இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரம் என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் மின் பழுது சரி செய்ய மின் வாரிய ஊழியர் முருகன், ஊது பத்தி நிறுவனம் அருகே உள்ள டிரான்ஸ்பார்மர் மீது ஏறி சரி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென முருகன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை காவல்துறையினர், சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: வெள்ளத்தில் மூழ்கிய விளை நிலங்கள் - இழப்பீடு வழங்க கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.