திருப்பத்தூர்: ஜவ்வாதுமலை புதூர்நாடு அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 20-க்கும் மேற்பட்டோர், சேம்பரை பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு தரிசனம் செய்ய டாடா ஏசி வாகனம் மூலம் சென்றுள்ளனர். அப்போது வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்து 100அடி பள்ளத்தில் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், பலத்த படுகாயம் அடைந்த 20-க்கும் மேற்பட்டோரை அப்பகுதி மக்கள், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் மற்றும் காவல் துறையினர் மூலம் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் ஆறு பேர் சம்பவ இடத்திலும், ஐந்து பேர் சிகிச்சையின்போதும் உயிரிழந்தனர்.
ஆறுதலும் இழப்பீடும்: இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்துக்குள்ளானவர்களை, வேலூர் சரக காவல் துறைத்தலைவர் ஆனி விஜயா, எஸ்.பி பாலகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இதனைத் தொடர்ந்து விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இழப்பீடாக தலா 2 லட்சம் நிதி உதவியும், காமடைந்தோருக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய் நிதியுதவியும் வழங்குவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: திடீரென மயங்கி விழுந்த சீமான்... திருவொற்றியூரில் நடந்தது என்ன?