திருப்பத்தூர்: ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதியில் சில நாள்களுக்கு முன்பு நில அதிர்வு ஏற்பட்டது. இதனிடையே மீண்டும் இன்று (டிசம்பர் 3) காலை 5 மணியளவில் ஆம்பூர் அடுத்த அத்திமாகுலப்பள்ளி மலைக்கிராம பகுதியில் மிகுந்த சத்தத்துடன் நில அதிர்வு உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதே பகுதியில் 2018ஆம் ஆண்டு தொடர்ந்து மூன்று நாள்கள் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகவும், மீண்டும் அதேபோன்று இம்முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இது குறித்து உரிய அலுவலர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சென்னையில் நில அதிர்வு - மக்கள் அதிர்ச்சி!