ETV Bharat / state

திட்டங்களை நிறைவேற்ற குறைகளை பொறுத்துக்கொள்ள வேண்டும் - பாதாள சாக்கடை திட்டம் தொடக்க விழாவில் ஆட்சியர் பேச்சு - பாதாள சாக்கதை திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்

திருப்பத்தூர்: ஊர்கூடினால்தான் தேர் இழுக்க முடியும். அதுபோல சில பல குறைகளை மக்கள் பொறுத்துக்கொண்டு அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என திருப்பத்தூர் நகரில் பாதாள சாக்கடை திட்டம் தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் சிவனருள் பேசினார்.

Drainage project inauguration
பாதாள சாக்கடை தொடக்க விழா
author img

By

Published : Feb 4, 2021, 5:40 PM IST

Updated : Feb 4, 2021, 11:08 PM IST

திருப்பத்தூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் ரூ. 104.1 கோடி மதிப்பீட்டில் 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் விவிவி கன்சல்டன்ஸியை சேர்ந்த வீர வெங்கட விஜயன் என்பவற்கு ஒப்பந்தம் விடப்பட்டு தொடங்கப்பட்டது.

திருப்பத்தூர் நகரம் 9.90 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், 36 வார்டுகளை உள்ளடக்கியுள்ளது. இங்கு 2016ஆம் வருடத்தின்படி மக்கள்தொகையானது 85 ஆயிரத்து 326 ஆக உள்ளது. இது 2031ஆம் வருடம் 99 ஆயிரத்து 389 எனவும், 2046ஆம் வருடம் 1 லட்சத்து 15 ஆயிரத்து 851 எனவும் கணக்கிடப்பட்டு இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ். நகரம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு 8.130 கிலோ மீட்டர் நீளத்துக்கு 150 மில்லி மீட்டர் முதல் 500 மில்லி மீட்டர் விட்டமுள்ள வார்ப்பு இரும்பு குழாய்கள் மூலம் துணை கழிவு நீர் உந்து நிலையம் மற்றும் பிரதான கழிவுநீர் உந்து நிலையங்களில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுநீர், ஜார்ஜ் பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது.

Drainage project inauguration
பாதாள சாக்கடை திட்டம் தொடக்கம்

இந்தக் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் இடைநிலை மக்கள் தொகையை கணக்கில் கொண்டு 11.43 எம்.எல்.டி. கழிவுநீரை சுத்திகரிக்க செயலாக்கப்பட்ட சக்தி முறை தொழில்நுட்ப முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டப்பணிகள் அனைத்தும் நவம்பர் 30, 2020இல் குடிநீர் வடிகால் வாரியத்தால் முடிக்கப்பட்டு டிசம்பர் 1, 2020 முதல் சோதனை ஓட்டத்தில் இருந்தன.

இதையடுத்து 10 ஆயிரத்து 674 வீட்டு இணைப்புகளில் அமைக்கப்பட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலிக் காட்சி மூலம் இன்று (பிப். 4) திறந்து வைத்துள்ளார். முன் நுழைவு அனுமதி தர கால தாமதம் ஆன காரணத்தினால் இரண்டு வருடத்தில் முடிக்கப்பட வேண்டிய பணிகள், சற்று கால தாமதமாக முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

திருப்பத்தூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் தொடக்கம்

இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் சிவனருள் விழாவில் பேசுகையில், “பொதுமக்களுக்கு தேவையான ஒரு திட்டம் போடப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் பல குறைகள் வரத்தான் செய்யும். பல பிரச்னைகளை கடந்து பாதாள சாக்கடை திட்டம் நிறைவடைந்து, திறக்கப்படுவது மிக்க மகிழ்ச்சி.

ஊர்கூடினால்தான் தேர் இழுக்க முடியும். அதுபோல சில பல குறைகளை மக்கள் பொறுத்துக்கொண்டு அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்” என்று கூறினார்.

விழாவில் நகர செயலாளர் டி.டி.குமார், நகர துணைச் செயலாளர் சரவணன், திருப்பத்தூர் நகராட்சி ஆணையர் செயற்பொறியாளர் பி.ராம்சேகர், உதவி நிர்வாக பொறியாளர் செல்வராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: வாரப்பட்டியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் மனு

Last Updated : Feb 4, 2021, 11:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.