திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி கிராமத்தில் அம்மா மினி கிளினிக் மருத்துவ சேவையை அமைச்சர் கே.சி. வீரமணி தொடங்கி வைத்தார். திருப்பத்தூர் மாவட்டத்துக்குட்பட்ட இடையம்பட்டி, பொன்னேரி, விசமங்களம், மாடப்பள்ளி, பெருமாபட்டு, பூங்குளம் ஆகிய ஆறு கிராமங்களில் அம்மா மினி கிளினிக் அமைக்கப்பட்டுள்ளது.
ஜோலார்பேட்டை அடுத்த இடையம்பட்டியில் நடந்த இந்நிகழ்வில், பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் நிலோபர் கபில் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர். இந்நிலையில், அரசு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் தனது பெயர் புறக்கணிக்கப்பட்டதாக திமுக எம்எல்ஏ நல்லதம்பி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது பாதுகாப்புக்காக நின்றிருந்த காவலர்கள் அவரது ஆதரவாளர்களை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து, காவல்துறையினர் திமுக எம்எல்ஏ நல்லதம்பியை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இதனால், அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: சிலிண்டர் விலை உயர்வுக்கு புதுச்சேரி முதலமைச்சர் கண்டனம்