ETV Bharat / state

முதலாம் குலோத்துங்கச் சோழனின் ஆட்சிக்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு! - கல்வெட்டு கண்டுபிடிப்பு

திருப்பத்தூர்: ஆண்டியப்பனூர் அருகே கி.பி. 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இடங்கைத் தள ‘சித்திரமேழி’ கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

Inscription
Inscription
author img

By

Published : Feb 9, 2021, 11:50 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் அருகே தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் ஆ. பிரபு, தொல்லியல் ஆய்வாளர் முனைவர் சேகர், ஆய்வு மாணவர்கள் சரவணன், தரணிதரன், சந்தோஷ் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது அவர்கள், 1000 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் கால இடங்கைத் தளக் கல்வெட்டை கண்டுபிடித்தனர்.

இது குறித்து முனைவர் பிரபு பேசுகையில், "ஆண்டியப்பனூர் நீர்த்தேக்கத்தின் அருகே தனியாருக்குச் சொந்தமான வேளாண் நிலத்தில் கல்வெட்டு ஒன்று இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அங்கே சென்று கள ஆய்வு மேற்கொண்டோம். அங்கே நிலத்திற்குள் புதைந்த நிலையில் ‘சித்திரமேழிக் கல்வெட்டு’ இருப்பதை உறுதிசெய்தோம். புதையுண்ட நிலையில் உள்ள கல்வெட்டினை நிலத்தின் உரிமையாளர் சிமெண்ட் கலவையால் பூசிவைத்து வழிபட்டுவருகின்றனர்.

அவர்களின் ஒத்துழைப்போடு கல்வெட்டில் இருந்த சிமெண்ட் கலவை அகற்றப்பட்டு சுத்தம்செய்யப்பட்டது. கல்வெட்டு 3 அடி அகலமும் 6 ½ அடி நீளமும் கொண்டதாக உள்ளது. கல்வெட்டின் மேற்புறம் திருமகள் உருவம் பொறிக்கப்பட்டு, பக்கவாட்டில் இரண்டு முழு உருவ யானைகள் துதிக்கையில் கலசநீரினை திருமகள் மீது பொழியும் நிலையில் காட்டப்பட்டுள்ளது.

யானைகள் கார் மேகங்களாகவும் திருமகள் பூமாதேவியாகவும் கருதப்படும். இவை வளமைக் குறியீடுகளாகும். யானைகளுக்கு மேல் இரண்டு பக்கங்களிலும் சாமரங்கள் காட்டப்பட்டுள்ளன. கரண்ட மகுடம் அணிந்து பாத பீடத்தின் மீது இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்டபடி திருமகள் பொழிவுடன் காட்டப்பட்டுள்ளாள்.

அவளது பாதத்திற்குக் கீழே இரண்டு முக்காலிகள் மீது பூரண கும்பக் கலசங்கள் வைக்கப்பட்டுள்ளன. அருகே இரண்டு அழகிய குத்து விளக்குகளும், கீழே ஒரு யானை, அங்குசம், முரசு, குரடு, ‘வளரி’ (பூமராங்), உழு கலப்பை, கொடிக்கம்பம் ஆகியவை வடிக்கப்பட்டுள்ளன. இவை போர்ப்படை, உழு படை, தொழில்படை ஆகியனவற்றைக் காட்டுவனவாகக் கருதப்படுகின்றது. அக்காலத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாணிபம் செய்யும் குழுவினர் இந்த மூன்று படைகளையும் வைத்திருக்க அனுமதிக்கப்பட்டனர்.

சிற்ப வேலைப்பாடுகளுக்குக் கீழே 10 வரிகள் கொண்ட எழுத்துப் பொறிப்புகள் காணப்படுகின்றன. கல்வெட்டு நிலத்தில் புதைந்திருந்ததால் மாவுப்பூச்சு வாயிலாகப் படி எடுக்கப்பட்டது. இதனை முதுபெரும் கல்வெட்டு அறிஞர் முனைவர் ராஜகோபால் வாசித்து விளக்கினார். அதன்படி இக்கல்வெட்டு முதலாம் குலோத்துங்கச் சோழனின் 24ஆவது ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டதாகும். இம்மன்னனின் காலம் கி.பி. 1070 முதல் கி.பி. 1120 வரையாகும். அதன்படி இக்கல்வெட்டு கி.பி. 1094இல் பொறிக்கப்பட்டதாகும்.

ஈரியூர் என்ற ஊரின் நான்கு எல்லைகளிலும் எல்லைக்கற்கள் நாட்டி ‘கண்ணஞ்….’, ‘அங்கன்’ என்பவர்களுக்கு அவ்வூரை காவல் காணியாக இடங்கைத் தளம் என்ற பெயரில் இடங்கைப் பிரிவைச் சேர்ந்த 99 பிரிவினரும் இணைந்து கொடுத்துள்ளனர். அதாவது ஒரு படைப்பிரிவின் தலைவனுக்கு காவல் காணியாக இவ்வூரை அளித்துள்ள செய்தி விவரிக்கப்பட்டுள்ளது.

அக்காலத்தில் தமிழ்நாட்டில் இடங்கை, வலங்கை என்ற இரு பிரிவுகள் இருந்திருக்கின்றன. வலங்கைப் பிரிவானது எண்ணிக்கை அடிப்படையில் இடங்கைப் பிரிவினரைவிட கணிசமாக உயர்ந்த நிலையில் இருந்துள்ளனர். இடங்கைப் பிரிவில் ஆறு உள்பிரிவுகளும், வலங்கைப் பிரிவானது அறுபது உள்பிரிவாகவும் இருந்துள்ளன.

கல்வெட்டு கண்டுபிடிப்பு

வலங்கையில் இருந்த பிரிவுகள் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட பணிகளை மேற்கொண்டுவந்துள்ளனர். இடங்கைச் சார்ந்தவர்கள் வேளாண்மையை ஒட்டிய தொழில்களான உலோகத் தொழிலாளர்கள், நெசவாளர்கள் போன்ற கைவினை உற்பத்தித் தொழில்களைச் செய்பவர்களாக இருந்துள்ளனர்.

ஆண்டியப்பனூரில் கிடைத்துள்ள இக்கல்வெட்டு தமிழ்நாடு வரலாற்றில் மிக முக்கியமான கல்வெட்டாகும். திருப்பத்தூர் மாவட்ட வரலாற்றுத் தடயங்களில் குறிப்பிடத்தக்க இக்கல்வெட்டினைத் தமிழ்நாட்டுத் தொல்லியல் துறையினர் மீட்டுப் பாதுகாத்திட வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: நண்பர்களுக்கு கடன் வாங்கி கொடுத்து ஏமாற்றமடைந்தவர் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.