திருப்பத்தூர்: பாஜக நிர்வாகியை படுகொலை செய்தவர்களை கைது செய்யக் கோரி அக்கட்சியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் இன்று (நவ.27) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்த பாஜக நகர துணைத் தலைவர் கலிகண்ணன் என்பவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு அதேப் பகுதியைச் சேர்ந்த ஹரிவிக்னேஷ் என்பவர் முன்விரோதம் காரணமாக கூலிப்படையை வைத்து காரில் கடத்தி சென்று சராமரியாக வெட்டி படுகொலை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே அவரது உடலை சடலமாக மீட்கப்பட்டார்.
இதனையடுத்து ஹரிவிக்னேஷ் உள்ளிட்ட மணிகண்டன், நவீன்குமார், ஆனந்த், அருண்குமார் உள்ளிட்ட 8 கூலிப்படையைச் சேர்ந்தவர்களை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த படுகொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யக் கோரி, திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் வாசுதேவன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பாஜக கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அப்போது உடனடியாக பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகளை கைது செய்யப்படவில்லை எனில், பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் காவல்துறையினரை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்தனர். மேலும், எந்த ஒரு அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க சுமார் 80-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வட இந்தியர்கள் தமிழகத்தில் ஊடுருவல் - குற்றஞ்சாட்டும் திருமாவளவன்