ETV Bharat / state

கரோனா மையத்தில் குத்தாட்டம்; சித்த மருத்துவர் ட்ரீட்மெண்ட்!

திருப்பத்தூர் சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தில் கரோனா நோயாளிகளின் மன அழுத்தத்தை போக்க நடனப் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது, இவர்களுடன் மருத்துவரும் சேர்ந்து நடனமாடுவது வரவேற்பை பெற்றுள்ளது.

கரோனா மையத்தில் குத்தாட்டம்
கரோனா மையத்தில் குத்தாட்டம்
author img

By

Published : Oct 8, 2020, 1:18 AM IST

திருப்பத்தூர்: கரோனா நோயாளிகளின் மன அழுத்தத்தை போக்க சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தில் நடனப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அக்ரகாரம் தொழில் நுட்ப கலைக்கல்லூரி கட்டடத்தில் செயல்பட்டு வரும் சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையம் கடந்த ஜூலை 16-ம் தேதி முதல் 60 படுக்கை வசதிகளுடன் இயங்கி வருகிறது.

சிகிச்சை பெறுபவர்களுக்கு சிறப்பு மைய வளாகத்திலே கரோனா தொற்று நோயாளியின் மன அழுத்தத்தை போக்க நடனப் பயிற்சி குத்தாட்டம் போன்ற மனமகிழ்ச்சி ஏற்படுத்துவதுடன் அது மட்டுமின்றி மண்பானை உணவுகள், மூலிகை சூப், ஆவி பிடித்தல், யோகா பயிற்சிகள், காலை, மாலையில் நடைப்பயிற்சியும் இரவில் பஃபே முறையில் நிலாச்சோறு, விளையாட்டுடன் வீடியோ படக்காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுவதால் நோயாளிகள் கடுமையான மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதுடன் விரைவில் குணமடைந்து வீடு ஐந்து நாள்களில் வீடு திரும்பியுள்ளனர்.

கரோனா மையத்தில் குத்தாட்டம்

சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தில் மற்றுமொரு முன் முயற்சியாக சிறிய நூலகம் ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளனர்.

இங்கு சிகிச்சை பெறுபவர்கள் மத்தியில் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் முயற்சியாக மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் பரிந்துரையின் பேரில் இந்த நூலகத்தைத் தொடங்கியுள்ளனர்.

இங்கு சமையல் குறிப்புகள், மருத்துவ நூல்கள், சிறுவர்களுக்கான கதைகள், சுற்றுச்சூழல் என 70-க்கும் மேற்பட்ட நூல்கள் இந்த நூலகத்தில் இடம் பெற்றுள்ளன. இதற்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சித்த மருத்துவ மையத்தில் இதுவரை 450 க்கும் மேற்ப்பட்ட பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ’குடிநீர் ஆலைகளை இழுத்து மூடுங்கள்’ - உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.