திருப்பத்தூர் மாவட்டத்திற்குள்பட்ட ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுபவர் வில்வநாதன். இவர், ஆம்பூர் தொகுதிக்குள்பட்ட தமிழ்நாடு-ஆந்திர எல்லைப் பகுதியான பொன்னப்பல்லி மலைக்கிராமத்தில் இரவு 9:50 மணியளவில் வாக்குச் சேகரித்துவந்தார்.
அப்போது அவரது ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்து அவரை வரவேற்றனர். இதில் பட்டாசுகள் சிதறி அருகில் இருந்த மணவாளன் என்பவரது மாட்டுக் கொட்டகையின் மீது விழுந்தது. இதில் இருந்த நெருப்பு மாட்டுக் கொட்டகையில் பற்றி, சற்று நேரத்தில் மளமளவென எரியத் தொடங்கியது.
இதனை அறிந்த மக்கள் உடனடியாக ஒன்றிணைந்து தீயை அணைத்தனர். இருப்பினும், கொட்டகை எரிந்து முழுவதும் நாசமடைந்தது.