திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி ஊராட்சியில் வேளாண் உழவர் கூட்டுறவு உற்பத்தி சங்கம் உள்ளது. இந்தச் சங்கத்தில் ஆண்டுதோறும் பருத்தி ஏலம் விடப்படும்.
இந்த நிலையில் தற்போது நடைபெற்ற ஏலத்தில் கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வாலாஜா, ஆம்பூர், திருவண்ணாமலை, சிங்காரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் தங்களுடைய பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதனிடையே கோயமுத்தூர், திருப்பூர், சென்னிமலை மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த வியாபாரிகள் போட்டிப் போட்டுக் கடந்த வாரம் ஆர்.சி.எச்.எனப்படும் ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.15 ஆயிரம் விற்கப்பட்டுள்ளது.
பருத்தி விலையை குறைத்த சங்க தலைவர்
இந்த நிலையில் அதே பருத்தியை இந்த வாரம் 13,741 ரூபாய்க்கு மாடப்பள்ளி உழவர் கூட்டுறவு சங்கத் தலைவர் தேவராஜன் மற்றும் செயலாளர் வெங்கடேசன் குறைந்த விலைக்குக் கேட்பதாகக் கூறி பருத்தியைக் கொண்டு வந்த விவசாயிகள் மாடப்பள்ளி வழியாக ஆலங்காயம் செல்லும் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினர் பருத்தி விவசாயிகளிடம் தங்கள் கோரிக்கை நிறைவேற வழி வகை செய்யப்படும் எனக் கூறினார்
இதனையடுத்து மறியலைக் கைவிடும்படி சமாதான பேச்சில் ஈடுபட்டுவந்தனர். இருப்பினும் சமாதானம் அடையாத பருத்தி விவசாய வியாபாரிகள் மாடப்பள்ளி வேளாண் உழவர் கூட்டுறவு சங்கக் கட்டடத்தை முற்றுகையிட்டனர்.
இதையும் படிக்க: Heavy snowfall in Himachal: இமயமலை தேசத்தை மூடிய பனி!!