திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று(செப்.28)புதிதாக 69 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,838ஆக அதிகரித்துள்ளது. மேலும் கரோனா தொற்றால் மாவட்டத்தில் இதுவரை 94 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 4,197 பேர் சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், இதுவரை மாவட்டத்தில் 84,501 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் 1312 நபர்களின் பரிசோதனை முடிவுகள் நிலுவையில் உள்ளது. மேலும் சிறப்பு மையங்களில் 2,958 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பள்ளி மாணவியை கடத்த முயன்ற திமுக நிர்வாகி!