திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (செப் 5) புதியதாக மேலும் 44 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,187ஆக உயர்ந்துள்ளது. மேலும், மாவட்டத்தில் இதுவரை 2,686 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேசமயம் 66 பேர் உயிரிழந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 59,847 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 1,312 பேர் பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கின்றனர். மேலும் 2,747 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.